ஞாயிறு, 9 மே, 2010

புசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் மின்னல் தாக்கி 07பேர் வைத்தியசாலையில்..!!

கம்பளை பிரதேசத்தின் புசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை மின்னல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 7பேர் புசல்லாவை வகுகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நயபனை மேமலை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் 6பேரும் பின்னர் வகுகபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேநேரம் நயபனை தோட்டத்தில் வீட்டு முற்றத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த என்.பிரபாளினி (21 வயது) என்னும் குடும்பப் பெண் மின்னலினால் தாக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேமலை தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.முத்தாய் (47 வயது), கே.ராஜமணி (48 வயது), எம்.ஞானேஸ்வரி (43வயது), எம்.சரஸ்வதி (33வயது), கே.வரதலட்சுமி (36வயது), ஏ.உதயகுமார் (22வயது) ஆகியோரே மின்னல் தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக