ஞாயிறு, 9 மே, 2010
யாழ். பொலிஸ் நிலையங்களில் பணிபுரிய 400 பொலிஸார் விரைவில் நியமனம்..!!
யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரிய 400 பொலிஸார் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பதற்காக குடாநாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை, மருத்துவப் பரீட்சை ஆகியவற்றுக்குத் தோற்றித் தெரிவானவர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோதே, மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. 400பேருக்கு நியமனம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபெற்ற தேர்தல்கள் காரணமாக நியமனங்கள் வழங்கப்படவில்லை. எனினும் இவர்களுக்கு நியமனம் வழங்கு வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக