திங்கள், 19 ஏப்ரல், 2010

ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு, ஐ.தே.கட்சி தலைவரின் அறிவிப்பையடுத்து கட்சிக்குள் நெருக்கடிநிலை..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றுகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை நியமிப்பது தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்குத் தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட மாட்டாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்ததை அடுத்து கட்சிக்குள் நெருக்கடிநிலை தோன்றியுள்ளதாகத் கூறப்படுகின்றது. இந்நிலையில் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் வெற்றியீட்டியமையினால் அவரது இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 18ம் திகதியே ஆரம்பமாகின்றது என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக