திங்கள், 19 ஏப்ரல், 2010
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி எம்.இமாமுக்கு தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படவில்லை..!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி எம் இமாமுக்கு இம்முறை தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. புலிகளின் காலகட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வடபகுதி முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டத்தரணி இமாம் நியமிக்கப்பட்டிருந்தார். நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சட்டத்தரணி இமாமுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது சட்டத்தரணி சுமந்திரன் என்பவரின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பிரேரிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக