ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

வடகிழக்கு மாகாண சபையை வலுவுறச் செய்திருந்தால் என்றைக்கோ புலிகள் இயக்கம் இல்லாமல் போயிருந்திருக்கும்.. - முன்னாள மாகாண சபை முதல்வர் வரதராஜப்பெருமாள்

முன்னாள் வட - கிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப்பெருமாள் மனந்திறக்கிறார்
தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டங்களை நடத்திய இயக்கங்களில் ஈ. பி. ஆர். எல். எப். இயக்கமும் ஒன்றாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அமைக்கப்பட்ட முதலாவது வட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர் அ. வரதராஜப்பெருமாள். 1990களில் வடக்கு கிழக்கில் மீண்டும் ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சினைகள் காரணமாக நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருந்தவர். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது பத்மநாபா ஈ. பி. ஆர். எல். எப். கட்சியின் தலைவராக இருக்கும் அவரைச் சந்தித்து உரையாடினோம்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருக்கிaர்கள். வந்ததற்கான காரணம் என்ன? இப்போதுள்ள நிலைமைகளை நீங்கள் எப்படி நோக்குகிaர்கள்?
பொதுத் தேர்தல் நேரத்தில் நான் வந்திருப்பதால் தேர்தலோடு எனது வருகையை பார்க்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல. நான் தேர்தல் பிரசாரத்துக்காக வரவில்லை. நான் சார்ந்த கட்சி பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, இத்தேர்தலில் போட்டியிடுகிறது. எங்களுடைய கட்சி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கின்ற பல இடங்களுக்கும் நான் சென்றேன். எங்களுடைய ஆதரவாளர்களை சந்தித்தேன்.யுத்தம் நடந்து முடிந்து இன்று ஜனநாயகச் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத் தேர்தல் ஒரு குறிப்பிட்ட அளவிலாவது சுதந்திரமான, ஜனநாயகமான சூழலில் நடைபெறுகிறது. இவ்வாறானதொரு சூழலில் மக்கள் எவ்வாறு இதில் பங்குபற்றுகிறார்கள். அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது முக்கியமானது. சமுகத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட விடயத்தில் இது சுறுசுறுப்பான காலகட்டமாக இருப்பதால் மக்களின் உணர்வலைகளை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. எனவே, அப்படியானதொரு காலகட்டத்தில் நிலைமைகள் எப்படியிருக்கின்றன எனப் பார்ப்பது எனக்கு முக்கியம்.உண்மையில் மக்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள் என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக யுத்தம் முடிந்த பிறகு வன்னியில் இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் அகதிகளாகி முகாம்களில் பல்லாயிரம் பேர் கொண்ட இந்த முகாம்களைப் பற்றி பல்வேறு விதமான கருத்துக்களும், கதைகளும் வதந்திகளும் சில உண்மைகளும் கூட வெளிவந்தன. தற்போது முகாம்களில் உள்ளவர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறியுள்ளனர். அதேபோல் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த பாதுகாப்பு வலயங்களும் சுருக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இருப்பிடங்களை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். எனினும் அந்த மக்கள் உண்மையான, சுதந்திரமான புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்களா? அந்தந்த பகுதிகளில் எவ்வாறான புனரமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன? என்பதை அவதானிப்பதும் அது தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அபிப்பிராயங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதும் எனது பிரதான நோக்கமாகும்.அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு வேண்டுமென்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இன்னும் சொல்லப் போனால் வெளிநாடுகளில் இருப்பவர்களில் ஒரு பகுதியினர் இங்கே தமிbழம் அமைக்க முடியாது போனதால் நாடு கடந்த தமிbழம் அமைக்கப் போகிறோம் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.அதேவேளையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் சமஷ்டி என்கிறார்கள் இன்று பல தலைவர்கள் 13வது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட கோரிக்கைகள் எழுகின்றன என்பதல்லவா முக்கியம்? மக்கள் மத்தியில் அரசியல் அதிகாரப் பகிர்வு, உரிமைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கின்றன? இலங்கை அரசாங்கம் என்னென்னவற்றை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? அது தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும்? இவ்வாறான மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அபிப்பிராயங்களை அறிவதே எனது பிரதான நோக்கமாகும்.இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் நான் என்ன செய்யலாம் என்பதில் ஒரு மதிப்பீட்டை செய்ய வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பல கிராமங்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை அறிந்து வந்திருக்கின்றேன். அதேபோல திருகோணமலைக்கும் சென்று அங்கு பலரை சந்தித்து கலந்துரையாடி வந்திருக்கின்றேன்.


எப்படிப்பட்ட அரசியல் தீர்வு வரவேண்டுமென்று அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணையுமா? அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்குமா? என கேள்விகள் எழுகின்றனவே. இது பற்றிய உங்கள் கருத்தென்ன?


அரசியல் தீர்வு என்பது அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும். மாகாண ஆட்சிகளுக்குத்தான் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். இலங்கை அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு அரசியல் யாப்பு திருத்தத்தின்படி 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கான அதிகாரங்களும் அந்த அரசியல் யாப்பினூடாகவே பகிரப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அதிகாரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன? உச்ச நீதிமன்றம் எவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கிறது? தனிப்பட்ட ரீதியில் என்னைக் கேட்டால் இந்த நாட்டுக்கு சமஷ்டி அமைப்பு பொருத்தமானது என்றே கூறுவேன். உலக நாடுகளை பொறுத்தளவில் பல்வேறு இனங்கள் வாழ்கின்ற ஜனநாயக நாடுகளில் சமஷ்டி அமைப்புத்தான் சரியானது என்றும் அதுதான் சரியான வளர்ச்சியடைந்த அரசியல் முறை என்றும் கருதி இந்நாடுகள் கடைபிடிக்கின்றன. கனடா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி இன்னும் பல சிறிய சிறிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அதை கடைப்பிடிக்கின்றன.மூன்றாம் உலக நாடுகளை அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என பார்த்தால் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இம்முறையையே கடைப்பிடிக்கின்றன. சமஷ்டி என்பது வளர்ச்சியடைந்த அரசியல் நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டம்தான். எனவே, அதை நாங்கள் கடைப்பிடிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை.சமஷ்டி அமைப்பு முறையை ஏற்க மாட்டேன் என சொல்லிக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா இந்த நாடு சமஷ்டி அமைப்பு முறையை கடைபிடிக்க வேண்டிய காலகட்டத்தை அடைந்து விட்டதாக தனது இறுதி காலத்தில்மேடை மேடையாக பகிரங்கமாக மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.அதன் பின்னர் சந்திரிகா ஒரு சமஷ்டி என்று சொல்லாவிட்டாலும் அந்தளவுக்கு உரிய அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு உரிய தீர்வை முன்வைத்தார். அதற்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதேவிதமான தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார். எனவே, இந்த நாடு முறையான, நாட்டுக்கு பொருத்தமான ஒரு அரசியல் யாப்பை அதாவது ஒரு சமஷ்டி அமைப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.எனினும், இன்று இருக்கின்ற சமஷ்டி அமைப்பு முறைக்கு நாம் ஒரே பாய்ச்சலில் போய்விட முடியாது. இதை ஒரு நீண்ட கால அரசியல் செயல் முறையின் ஊடாகவே செயற்படுத்த முடியும். தற்போது இலங்கையில் இருக்கின்ற அரசியல் யாப்பில் 13வது திருத்தத்தின் மூலமாக ஒரு அதிகாரப் பகிர்வு நடந்திருக்கின்றது. அந்த அதிகாரப் பகிர்வு இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அமுலாக்கப்படவில்லை. வியாக்கியானம் செய்யப்படவில்லை.இரண்டு பிரதான விடயங்கள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. 13வது திருத்தச் சட்டம் என்பது இரண்டு கண்களைப் போன்றது. அதில் ஒன்று வியாக்கியானம் மற்றது நடைமுறைப்படுத்துவது. அதாவது திருத்தச் சட்டத்தை வியாக்கியானம் செய்து, அரசியல் யாப்பில் 13வது திருத்தச் சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்விற்கு சரியான விளக்கம் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் ஜனாதிபதியால் அல்லது ஜனாதிபதி அதற்கென விசேட குழுவொன்றை நியமித்து அல்லது அமைச்சரவை மூலமாக அதற்கென வியாக்கியானம் செய்ய வேண்டும். அது தொடர்பாக அரசாங்கத்திற்கு மேலும் சந்தேகம் இருந்தால் அதனை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.அப்படியானதொரு வியாக்கியானத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை முழுமையாக மனதார நிறைவேற்றுதல் வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தில் சில அடிப்படையான குறைபாடுகள் இருக்கின்றன. அதில் இருக்கின்ற சிலேடைத் தன்மை கொண்ட வார்த்தைகளை மாகாண அரசாங்கம் ஒரு விதமாகவும் மத்திய அரசாங்கம் இன்னொரு விதமாகவும் வியாக்கியானம் செய்ய முடியும்.ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து மறுகையால் பிடுங்கவும் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பின் இணைப்புகளினூடாக எடுத்துக் கொள்வதும் சாத்தியம். நிலப் பகிர்வு தொடர்பாக மாகாண அரசினுடைய நிர்வாகத்தை எவ்வாறு மத்திய அரசுடன் பகிர்வது மற்றும் நிதி நிலவரங்களை பகிர்வது தொடர்பாக தெளிவாக 13வது திருத்தச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.பல இடங்களில் இச்சட்டத்தின் ஒரு இடத்தால் கொடுத்து பல இடத்தால் பறிக்கின்ற வகையாக அது அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான குறைபாடுகள் 13வது திருத்தச் சட்டத்தில் இல்லாமல் செய்யப்பட வேண்டும். 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திர காந்தனும் 13வது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய அர்த்தத்தில் நான் கூறவில்லை. அவர்கள் சொல்கிற அர்த்தத்தில் பார்த்தால் கடந்த 20 வருடங்களாக 13வது திருத்தச் சட்டம் இலங்கையின் ஏழு மாகாணங்களிலும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கிழக்கு மாகாணத்திலும் கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்கி விட்டோம் எனக் கூறுகிறார்கள். இவ்வகையிலான 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதில் எந்தவிதமான பயனும்இல்லை. அது பிரச்சினைக்கு தீர்வாகவும் மாட்டாது. அது நடைமுறையில் தொடரும் என்றால் மேலும் இந்தப் பிரச்சினையை இழுத்துக் கொண்டு போவதற்கும், தீய சக்திகள் இனவாதிகள் வளர்ச்சியடைவதற்குமே வழிவகுக்கும். இது இந்த நாடு ஒன்றுபடுவதற்கு விடாது. இந்த நாட்டின் மக்களின் சந்தேகங்களை தீர்க்க வழிவிடாது. இந்தநாட்டில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையின மக்களை நம்பி வாழ்வதற்கு இடமளியாது. 13வது திருத்தச் சட்டத்தின் ஒவ்வொரு சரத்துக்களையும் மீண்டும் இலங்கை அரசாங்கமும், உச்ச நீதிமன்றமும் ஆராய்ந்து அவற்றின் பேரில் உண்மையான அதிகாரங்களை வழங்க முன்வர வேண்டும்.இந்த அதிகாரங்கள் ஏனைய நாடுகளில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு இந்த 13வது திருத்தச் சட்டத்தில் இந்த அதிகாரங்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அந்த அடிப்படையில் வழங்கினால்தான் அந்த 13வது திருத்தச் சட்டம் பயனுடையதாக இருக்கும்.13வது திருத்தச் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தால் அதுவொரு அரசியல் தீர்வுக்குரிய பொதியாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான வியாக்கியானங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தில் சிலேடைகள், குழப்பங்கள் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கிறது. நிதி, நிலம், சுகாதாரம் தொடர்பான பல விடயங்கள் தெளிவாகவே இருக்கின்றன. விடயங்களையாவது இன்னும் அமுல்படுத்தாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விடயம்.எனவே, அரசியல் யாப்பில் இருக்கின்ற குழப்பமற்ற சிக்கலற்ற விடயங்களை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதற்குப் பிறகு அதிலுள்ள குறைபாடுகளை நீக்கும் வகையிலான வியாக்கியானங்களை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் அடுத்தக் கட்ட அரசியல் தீர்வுக்கு போகலாம்.அடுத்தக் கட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கிடையில் ஒரு பேச்சுவார்த்தை நடத்துதல் வேண்டும். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான கமிட்டியின் செயற்பாடு என்பது இரண்டாம் கட்டத்திற்கான விடயமே தவிர முதலாவது கட்டத்திற்கான விடயமல்ல. கையிலேயே இருக்கும் விடயங்களை செய்யாமல் இரண்டாவதாக பேசப்படுகின்ற விடயத்தை பேசுவதிலும் அர்த்தம் இல்லை. அது செய்யப்படுமா அல்லது எப்பொழுது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் 06 ஆண்டுகள் கடந்த விட்டன.நான் சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் பழகியதில் கண்ட விடயம் தான் அவர்கள் மத்தியில் எவ்வகையிலும் தமிழ் தனி நாட்டுக் கோரிக்கை இல்லை என்பதாகும். அப்படியான விருப்பமும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை. அப்படியொரு இயக்கம் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.தமது அரசியல் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்ற அபிப்பிராயமும் தமிழ் மக்களிடையே இல்லை. இந்த இரண்டு விடயங்களும் மிகத் தெளிவாகவே காணப்படுகின்றன. நான் போகின்ற எந்த இடத்திலேயும் மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அதேபோல் நாங்கள் தனிநாடுதான் பெற வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை.தமிழ் மக்கள் நீண்ட அனுபவத்தின் பின்னர் இந்த இரண்டு விடயங்களிலும் மிகத் தெளிவாக இருக்கின்றனர். எனவே, இந்த விடயங்களையும் இக்காலக் கட்டத்தையும் சிங்களத் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் காலம் செல்லச் செல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சில தமிழ் தீவிரவாதிகள் மக்களை மீண்டும் ஒரு கற்பனை உலக போராட்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடும். தீவிரவாதிகள் ஆங்காங்கே குண்டுகளை எறிந்து குழப்பங்களை விளைவிப்பதற்கான சூழல் ஏற்டக் கூடும். அதற்கு அவர்கள் நடைமுறையாக ஏதாவது காரணங்களை சொல்லக் கூடும். எனவே, அவ்வாறான வாய்ப்புகளுக்கு சந்தர்ப்பம் அளிக்காமல் மக்கள் இன்றைக்கு இருக்கக் கூடிய உறுதியான நிலையை அடிப்படையாகக் கொண்டு சரியான அரசியல் தீர்வை மக்களுக்கு வழங்குதல் வேண்டும். உடனடியாக தீவிரமாக புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களை முன்னெக்க வேண்டும்.தமிழர்கள் நாங்கள் பலம் குன்றியவர்களாவும் இனி சிங்களவர்கள் என்ன சொன்னாலும்தலை குனிந்து அடிமைகளாகத்தான் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பயம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த பயத்தை இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதியினதும் சிங்களத் தலைவர்களினதும் கடமையாகும். அது உடனடிக் கடமை. எனவே, தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையான செயற்பாடுகளை சிங்களத் தலைவர்கள் அதுவும் முக்கியமாக ஆட்சியில் உள்ள தலைவர்கள் செய்யாது இருத்தல் வேண்டும்.மீண்டும் சிங்கள குடியேற்றத்தை கொண்டு வந்து எங்கள் நிலங்களை பெரியளவில் பறித்து விடுவார்களோ என்ற பயம் தமிழர்கள் மத்தியில் உள்ளது. இந்த பயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே, அரசாங்கம் இவ்வாறான விடயங்களை சரியாகக் கையாண்டால் கூட்டமைப்பு மீண்டும் தமிழர்களை ஏமாற்றக் கூடியதொரு நிலையைத் தவிர்க்கலாம்.யுத்தம் முடிந்து விட்டது. தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத கலாசாரத்திற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை. பிரிவினைக்கான எந்த கோஷமும் இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் போடும் கோஷங்களை பார்த்து அரசாங்கம் இங்குள்ளவர்களை அதே நிலைப்பாட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. இங்குள்ள மக்களை அரசாங்கம் சந்தேகப்பட கூடாது. அரசாங்கம் தனக்கு தமிழர்கள் பேரில் சந்தேகம் இல்லையென்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.அரசாங்கம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தின் அதிகாரம் யுத்த காலத்தில் தேவையான இருந்திருக்கலாம். யுத்தம் முடிவடைந்து விட்டது. எனினும் உடனடி யாகவே எல்லாவற்றையும் மூட்டை கட்டு என்று இராணுவத்தை சொல்லவும் முடியாது. ஆனால் அரசாங்கம் மிக விரைவாக இராணுவத் தலையீடுகள், இராணுவ நிர்வாகங்கள் இராணுவ நிலைகளை குறித்து குடிமக்களின் ஆட்சியை அரசாங்க நிர்வாகிகளின் ஊடாக நடத்த ஆவன செய்ய வேண்டும்.


தென் பகுதி அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?


தென் பகுதி அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் சமசமாஜ கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தேன். கடந்த காலத்தில் ஈ. பி. ஆர். எல். எப். கட்சிக்கு மக்கள் கட்சியுடன் விஜயகுமாரதுங்கவின் காலத்திலிருந்து தொடர்புகள் இருந்தன. அதே போல மலையகத் தொழிற் சங்கங்களுடன் தொடர்புகள் இருந்தன. அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் எமது நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஐ. தே. கட்சிக்குள்ளேயும் பல முற்போக்கானவர்கள் இருக்கின்றன. இவற்றை கருத்திலெடுத்து வெறுமனே ஒரு இனக் குழுவாக அரசியல் கட்சியாக செயற்படுவதை விடுத்து இனவாத மதவாதங் களுக்கப்பால் பல்வேறு கட்சிகளிடையேயும் ஒரு ஐக்கியம், கூட்டான செயற்பாடுகளை முன்னெடுப்போம். நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பாக குரல் எழுப்புதல் அக்கறை கொள்ளுதல் ஆகிய பண்புகள் எதிர்காலத்தில் வரவேண்டும்.எதிர்காலத்தில் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதென்பது அவசியமானதொரு விடயம். அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றால் அதற்காக நாம் வன்முறைகளுக்குப் போகவேண்டிய அவசியமில்லை. வன்முறைகள் வெற்றியைத் தராது என்பதை அனுபவ ரீதியாக கண்டுவிட்டோம். அறமுறை முறைகள் வன்முறையற்ற போராட்டங்கள் ஒருநாளும் தோற்காது. வெல்வது என்றால் காலதாமதமாகலாம். அறவழிப் போராட்டம் யாரையும் மிரட்டுவதற்கல்ல. மாறாக அவர்களின் மனச்சாட்சிக் கண்களைத் திறப்பதற்காக தமிழ் மக்களின் நியாயங்களை அவர்கள் நம்பிச் செய்வதாக நமது செயற்பாடுகள் அமைய வேண்டும். நியாயங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.அஹிம்சை முறை இன்னொருவனை அச்சுறுத்துவதாக இருந்தால் ஒருவகை வன்முறையே என்றார் காந்திஜி. எனவே எதிர்காலத்தில் அஹிம்சை என்பது யாரையும் மிரட்டுவதற்காக அல்ல; மற்றவர்களின் மனச்சாட்சியை திறப்பதற்கான போராட்டமே என்பதை அறியச் செய்ய வேண்டும். எமது கோரிக்கைகளை மற்றவர்களுக்கு தீங்கில்லாமல் நாம் முன்வைக்க வேண்டும். அப்படி முன்வைக்கும்போது சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்படும். உண்மைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் தங்களது தலைவர்களை வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை தமிழர்கள் நடத்தியிருந்தால் இத்தனை இலட்சம் மக்கள் செத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நியாயங்கள் சிங்கள மக்களுக்குத் தெரியாமல் போயிருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.


வட கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது நீங்கள் ஈழக்கொடியை ஏற்றியதாக தென்பகுதியில் பேசப்படுகிறதே?


வடகிழக்கு மாகாண அரசைப்பற்றிய பிரேமதாசாவின் பிரசாரமும், புலிகளினது பிரசாரமும் மற்றும் சர்வதேச நாடுகள் சில செய்த பிரசாரமும் மேலும் இலங்கையிலுள்ள சில ஊடகங்கள் செய்த பிரசாரமும் என்னைப்பற்றிய தப்பான ஒரு அபிப்பிராயத்தை சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. அதனை மாற்றுகின்ற வகையில் நான் செயற்பட முற்படுவேன்.இன்று தமிழர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.அந்த வடகிழக்கு மாகாண சபை தொடர்ந்திருந்தால், ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவும் அடுத்து வந்த ஜனாதிபதிகளும் வடகிழக்கு மாகாண சபையை வலுவுறச் செய்திருந்தால் என்றைக்கோ புலிகள் இயக்கம் இல்லாமல் போயிருந்திருக்கும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் செத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 60 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 40 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் போரில் செத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 1990ம் ஆண்டுக்குப் பின்னர் மட்டும் 4 இலட்சம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களை நாடு இழந்திருக்கிறது. இவையெல்லாம் என்னத்தை காட்டுகிறது என்றால் தேசிய பிரச்சினையைத் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வந்தபோது பெருந்தொகையான அரசியல் தலைவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைத்தான். எனவே இனியும் அவ்வாறானதொரு தவறை தமிழ்த் தலைவர்களும் சரி சிங்களத் தலைவர்களும் சரி செய்துவிடக் கூடாது. நான் ஏற்றிய கொடி வடகிழக்கு மாகாண சபை கொடியே தவிர ஈழக்கொடி அல்ல. வட கிழக்கு மாகாண சபைக்காக அன்று நான் ஏற்றிய கொடி இன்றைக்கும் வடமாகாணத்தின் கொடியாக அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்ட வரலாற்றிலேயே ஒரு தமிழ்த் தலைவர் இலங்கையின் சிங்கக் கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றினார் என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும். அதை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லவில்லை.வட கிழக்கு மாகாண சபைக்கு புலிகளுடன் சேர்ந்து பிரேமதாச நெருக்கடி கொடுத்த போது நாட்டிலுள்ள ஏனைய சிங்களத் தலைவர்களிடம்நான் முறையிட்டேன். அவர்களும் கூட அதற்கு சார்பாக செயற்படவில்லை. பிரேமதாசவின் பிரசாரத்திற்கு மயங்கி அதையே நம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் ஈழப் பிரகடனம் செய்யப்பட்டதாக சொன்னார்கள். 19 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அதைத்தரா விட்டால் நாங்கள் ஈழம் என்றொரு நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்பதை வலியுறுத்தினேன். நாங்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் வட கிழக்கு மாகாண சபையையும் ஏற்பதற்கு முன் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள். நாங்கள் அதனை கைவிட்டு இலங்கை - இந்திய அரசாங்கங்களை நம்பி அயுதங்களைஒப்படைத்து வட கிழக்கு மாகாண சபையை ஏற்று அதனைக் கட்டியெழுப்ப பாடுட்டோம். அதற்காக 3000 பேரை பலிகொடுத்தோம். எங்களில் எழுநூறு பேரை அப்போதைய இலங்கை இராணுவமும் புலிகளும் சேர்த்து கொண்றனர். அப்போது இலங்கைச் சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்ளவில்லை. இருந்த போதிலும் அவர்கள் அப்படிச் செய்தனர். அதை யாரும் சிங்கள மக்களுக்குச் சொல்லவில்லை. அன்றிருந்த சிங்கள இனவாதத் தலைவர்கள் வட கிழக்கு மாகாண சபையை இல்லாமல்செய்வதற்காக அதிகாரப் பரவலாக்கலை இல்லாமல் செய்வதற்காக சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்தார்கள். புலிகள் தாங்கள் நினைத்த அந்த தமிbழ கனவுகளுக்காக தமிழர்களை கொண்டு செல்ல பிரசாரம் செய்தார்கள். இந்த இரண்டு இனவாதிகளும் ஒரு நியாயமான அரசியல் தலைவரை இரண்டு மக்கள் மத்தியிலும் ஒரு பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்தினர்.தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஊடகங்களும் தமிழ் மக்களின் சமூகத் தலைவர்களும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்குத்தலைவர்களும் கடந்த காலத்தில் செய்யப்பட்ட பொய்ப் பிரசாரங்களை உடைத்து உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள் என நான் நம்புகின்றேன்.உரையாடியவர்: பி. வீரசிங்கம்
- தினகரன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக