ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

யாழ். மாநகரில் தடைகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

யாழ். மாநகர சபைக்குரிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறுகளையும் சிரமங்களையும் ஏற்படுத்தும் அனைத்துத் தடைகளையும் அகற்றி இப்பகுதிகளை குப்பைகளற்ற சுத்தமான பகுதிகளாக மாற்றும் தனது திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமுக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக்கியுள்ளார். இதன்பிரகாரம் நேற்றுஅதிகாலை யாழ். நகரப்பகுதி மற்றும் குருநகர், பாசையூர், நாவாந்துறை போன்ற பகுதிகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பொதுமக்களின் பாவனைக்கு உட்படும் பகுதிகளில் அம்மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு இடை யூறு மற்றும் சிரமங்களை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்ப்பது மற்றும் குப்பைகளை குவிக்காமல் தடுப்பது குறித்தும் அப்பகுதி வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்றுமாலை யாழ் மாநகரசபைக்கு விஜயம்செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குப்பைகள் கொட்டும் இடங்களை ஆராய்ந்து அவற்றை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணிப் புரைகளை வழங்கியதுடன் கடைத்தெருக்கள் முழுதும் சென்று குப்பைகளை நடை பாதைகளில் கொட்டுவதை தவிர்த்துக் கொள்ளும்படி ஆலோசனை தெரிவித்ததுடன், இதனை மீறி குப்பைகளை பொதுமக்களின் பாவனைக்கு உட்படும் நடைபாதைகளிலும் ஏனைய இடங்களிலும் கொட்டுவோர் அதனை அகற்றும் பொறுப் பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற சட்டவிரோதமான நடைபாதை கடைகளை அகற்றுவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக