சனி, 10 ஏப்ரல், 2010

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் இனவாத கொள்கைகளைக் கைவிட வேண்டும்-கிஷோர்..!!

தமிழ் கூட்டமைப்பு சார்பில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாத கொள்கைகளை கைவிட்டு செயற்பட வேண்டுமென முன்னாள் எம்.பி சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவநாதன் கிஷோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த காலங்களில் வன்னி மக்களுக்காக தாம் ஆற்றிய சேவையை மக்கள் உதாசீனம் செய்தமை கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் பெயரைப் பிரச்சாரம்செய்து சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் ஆசனங்களை வென்றெடுத்துள்ளனர். ஆளும் கட்சியைவிடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4000 வாக்குகளையே வன்னி மாவட்டத்தில் கூடுதலாக பெற்றுள்ளது. வன்னி மாவட்டத்தில் தொடர்ந்தும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போகிறேன் என்றும் கிஷோர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக