சனி, 10 ஏப்ரல், 2010

132 பேருடன் விமானம் எரிந்து சாம்பல் ; போலந்து நாட்டு அதிபர் - மனைவி பலி

ஸ்மொலென்ஸ்க்: ரஷ்யாவில் விமானம் தீபிடித்து நொறுங்கி விழுந்தது. இதில் போலந்து நாட்டு அதிபர் லெக்ஸ் மற்றும் அவரது மனைவி உள்பட 132 பேர் கருகி இறந்து விட்டனர். இது குறித்து அந்நாட்டு அரசு வெளியுறவு துறை அமைச்சகம் விமானத்தில் அதிபர் சென்றார் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் நாட்டில் இருந்து துபாய்வ் டு 154 என்ற விமானம் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்மொலென்ஸ்க் ( மேற்கு ரஷ்யா ) நோக்கி பறந்தது.
இந்த விமான நிலையத்தில் இருந்து 1. 5 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்து வந்து கொண்டிருந்த போது விமானம் தீ பிடித்து எரிந்து நொறுங்கி விழுந்தது. விமானம் தூள். தூளாக சிதறி விழுந்து கிடந்தது. இங்கு தரை இறங்க விமானம் முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் கருகி உயிரிழந்து விட்டனர் என ரஷ்ய அரசு உறுதி செய்தது.
விமானத்தில் போலந்து நாட்டு அதிபர் லெக்ஸ் அலெக்சாண்டர் கேட் சின்ஸ்கியும் , அவரது மனைவி மரியாவும் சிக்கி இறந்து விட்டனர். பனிமூட்டம் காரணமாக வானம் இருட்டாக இருந்ததாகவும் இதனால் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான முழு விவரங்கள் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது. போலந்து அதிபர் லெக்ஸ் வயது 61 . இவருக்கு மர்தா என்ற ஒரே மகள் உள்ளார். இவர் கடந்த 2005 ல் போலந்து நாட்டின் அதிபரானார். இவர் விமானத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் போலந்து நாட்டில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக