புதன், 21 ஏப்ரல், 2010

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்..!!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை இன்று அறிவித்துள்ளது. ரட்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயர்ட்ன, டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டி.ஏ.டபிள்யூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜித்தன்ஜன குணவர்த்தன, எல்லாவல மேதானந்த தேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜாகொட, விநாயகமூர்த்தி முரளிதரன், ஜெ.ஆர்.பி.சூரியபெரும, ஜனக பண்டார பிரியந்த, ரஜீவ விஜயசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், மாலினி பொன்சேகா, கமல ரட்னதுங்க ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர் ஆளும் கட்சியில் கண்டியில் போட்டியிட்ட மஹிந்தானந்த அலுத்கமகே 146,765 வாக்குகளைப் பெற்று முதன்மை வெற்றி- கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் போட்டியிட்ட மஹிந்தானந்த அலுத்கமகே 146,765 வாக்குகளைப் பெற்று கண்டி மாவட்டத்தில் முதன்மையாக வெற்றி பெற்றுள்ளார். அத்தோடு கெஹலிய ரம்புக்வெல்ல 133,066 வாக்குகளையும், எஸ்.பி. திஸாநாயக்க 108,169 வாக்குகளையும் லொகான் ரத்வத்த 81,812 வாக்குகளையும், எரிக் வீரவர்தன 54,195,திலும் அமுனுகம 45,909, பைசர் முஸ்தபா 44,648, சரத் அமுனுகம 44,478 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேவேளை, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நான்கு பேர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் 54,937 வாக்குகளையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 54,047 வாக்குகளையும், லக்ஸ்மன் கிரியெல்ல 53,690 வாக்குகளையும், எம்.எச்.எம். ஹாலீம் 46,240 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக