புதன், 21 ஏப்ரல், 2010

புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நெடுங்கேணிக்கு விஜயம்..!

புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையான பிரதிநிதிகள் குழு நேற்றையதினம் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த விஜயத்தின்போது நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்ற ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான குழுவினர் அங்குள்ள மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து கொண்டனர். அத்துடன் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி விவசாய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக