புதன், 7 ஏப்ரல், 2010

மஹிந்த சிந்தனைக் கொள்கைத்திட்டம் ஏனையவர்களின் கொள்கைகளினால் மாசுபடுத்தப்பட்டுள்ளது-வீ.ஆனந்தசங்கரி..!

மஹிந்த சிந்தனைக் கொள்கைத்திட்டம் ஏனையவர்களின் கொள்கைகளினால் மாசுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களின் அவலநிலை தொடர்பில் ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. யுத்த நிறைவுடன் பல்வேறு மாற்றங்கள் என மக்கள் எதிர்பார்த்தபோதிலும், துரதிஸ்டவசமாக எவ்வித காத்திரமான முன்னேற்றமும் இடம்பெறவில்லை. இடம்பெயர் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவில்லை மாறாக ஏமாற்றங்களே விஞ்சி நிற்கிறது. யுத்தகாலத்தில் இழந்தவற்றை மீள அளிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தபோதிலும், இதுவiரியல் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுத்த காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. புலிகளிடம் ஒரு நாளேனும் பயிற்சி பெற்றவர்கள் சரணடைய வேண்டுமெனவும், அவ்வாறானவர்கள் விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்தபோதிலும், இவ்வாறானவர்கள் நீண்டகாலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கில் காத்திரமான அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறுகின்றனவா என்பது சந்தேகத்திற்கு இடமாக மாறியுள்ளது. இராணுவத்தினரின் மனிதாபிமானப் பணிகள் பாராட்டுக்குரிய எனவும், பௌத்த மத பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதவை. வடக்கில் படைவீரர்கள் பௌத்த மதத்தை வியாபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக