வியாழன், 22 ஏப்ரல், 2010

ஐரோப்பிய விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலையிலிருந்து பாரிய புகை வெளியேறுவது சற்றுக் குறைந்துள்ளதையடுத்து விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிமலையிலிருந்து திடீரென வெளியேறிய பாரிய புகைமண்டலம் மற்றும் சாம்பல் துகிள்கள், ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் 30 ஆயிரம் அடி உயரத்துக்குப் பரவி இருந்தன.
இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. புகை மண்டலத்துக்குள் விமானங்களை இயக்கினால் அது விபத்தில் சிக்கி ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கருதியே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஐரோப்பாவில் 30 நாடுகளில் பாதிக்கப்பட்ன. இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட 13 நாடுகளில் ஒட்டு மொத்தமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட் டன. கடந்த 6 நாட்களாக இங்கு விமானங்கள் இயக்கப் படாமல் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
இப்போது எரிமலையின் புகை சீற்றம் சற்று குறைந்துள்ளது. வான்வெளியில் சாம்பல் பரவுவது குறைந்து உள்ளன. இதனால் கடந்த திங்கட்கிழமை சோதனை ஓட்டமாக விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சில நாடுகளில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டன. நேற்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் 75 சதவீத விமானங்கள் இயக்கப்பட்டன.
இன்று 100 சதவீத விமானங்களும் இயக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு விமான நிலையங்களில் கடந்த 6 நாட்களாக தவித்த பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்றடைந்தனர். அனைத்து விமான நிலையங்களும் முன்பு போல களைகட்ட ஆரம்பித்துள்ளன.
6 நாட்களில் மட்டும் 95 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து துறைக்கு ரூ.8,500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக