வியாழன், 15 ஏப்ரல், 2010

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கெதிராக அவுஸ்திரேலியாவில் வழக்கு

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது அவுஸ்திரேலிய காவல்துறையினருக்கும் அரசாங்கத்திற்கும் இந்த வழக்கு மிகவும் முக்கியமானதென தெரிவிக்கப்படுகிறது கடந்த செப்டம்பர் மாதம் 54பேரை கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துச் சென்றதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்த சந்தேக நபர் அவுஸ்திரேலியாவின் பேர்த் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகால சிறைத்தண்டனையும் 220000டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என சுட்டிக் காட்டப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரையில் 133பேர் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக