வியாழன், 15 ஏப்ரல், 2010

படைவீரர்கள் தியாகங்கள் நினைவு கூறப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா

விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக பல்வேறு வழிகளில் தியாகங்களை மேற்கொண்ட படைவீரர்கள் நினைவுக்கூறப்படவேண்டும் எனஜெனரல் பொன்சேகா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் சகல இன மக்களும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடக்கூடிய ஓர்சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உயிர் மற்றும் உடல் உறுப்புகளை தியாகம் செய்த சகல படைவீரர்களையும் இந்த தருணத்தில் நினைவுகூறவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை வழிநடத்திய தமக்கு குடும்பத்தாருடன் இணைந்து புத்தாண்டுகொண்டாட முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனினும் நாட்டு மக்கள் சந்தோஷமாக புத்தாண்டை கொண்டாட கூடிய சூழ்நிலை உருவானமை மகிழ்ச்சிக்குரியதென அவர் தெரிவித்துள்ளார் நாட்டின் சகல மக்களுக்கும் அமைதியானதும் சுபீட்சமானதுமான ஓர் புத்தாண்டு உதயமாகும் என அவர் தெரிவித்தள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக