வியாழன், 15 ஏப்ரல், 2010
ஐ.நா அமைதிகாக்கும் படையில் இலங்கைப் பெண்கள்
வுரலாற்றில் முதல்தடவையாக ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இலங்கை பெண்கள் அங்கம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இலங்கை இராணுவத்தை சேர்ந்த பெண் வீரங்கணைகள் விரைவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கம் படையில் கடமையாற்றவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் சூரிய தெரிவித்துள்ளார். அமைதி காக்கும் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் படைவீரர்கள் மற்றும் உயரதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்படும் மற்றும் உயரதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் ஐக்கியநாடுகள் அமைப்பு மேலதிக படைவீரர்களை கோரினால் அனுப்பிவைக்க இலங்கை இராணுவம் தயார் என அவர் தெரிவித்துள்ளார் யுத்தகாலத்தில் இலங்கை படைவீரர்கள் ஈட்டிய நன்மதிப்பு தொடர்ச்சியாக பேணப்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை பேணுவதில் படைவீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக