சனி, 7 ஜூன், 2014

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இனியபாரதி நியமனம்!!



கிழக்கு  மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட ,இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது
இவர், உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண  கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த துரையப்பா நவரத்தினராஜா, 2012ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக