வெள்ளி, 16 ஏப்ரல், 2010

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசியப்பட்டியல் கிடைக்குமா?

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமண பெயர்ப்பட்டியலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக