புதன், 21 ஏப்ரல், 2010

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தேர்தலில் தோல்வி..!

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் கூறப்படுகிறது. கண்டி மாவட்டத்தின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மனோகணேசன், பாராளுமன்றத்திற்கு தெரிவாகக்கூடிய அளவிற்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நான்கு பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் 54937 வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்கு பட்டியலில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் எம்.எச்.எம். ஹாலீம் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளாக 145,765 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். எஸ்.பி.திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, சரத் அமுனுகம, லொகான் ரத்வத்த, திலும் அமுனுகம, எரிக் வீரவர்தன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் ஆளும் கட்சி சார்பில் தெரிவாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக