ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் விடயமான தீர்மானம் சட்டரீதியானது - அவுஸ்திரேலியா..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பில் தாம் மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானதே என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அகதிகளுக்கு எதிர்காலத்தில் அடைக்கலம் வழங்குவதில்லை என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அண்மைய தீர்மானம் குறித்து பல்வேறு மட்டத்தினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அவுஸ்திரேலிய மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இலங்கை, ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வீசா வழங்குவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் சட்ட வல்லுனர்களிடம் தெளிவான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போர் மூன்று மாத காலத்திற்கும், ஆப்கானிஸ்தானிலிருந்து பிரவேசிப்போர் 06மாத காலத்திற்கும் வீசாகோரி விண்ணப்பிக்க முடியாது என்பதே புதிய நடைமுறை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுவரும் சூழ்நிலை மாற்றங்களை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக