செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புலிகளின் அழுத்தமின்றி சுதந்திரமான முறையில் வடக்கில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது -ஜாதிக ஹெல உறுமய கட்சி

விடுதலைப்புலிகள் அமைப்பின் அழுத்தங்கள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்த முடிந்தமை மாபெரும் வெற்றியாக கருதப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவி;த்துள்ளது கடந்த மூன்று தசாப்த காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பே வடக்கின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததாக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகள் அரசியல் நடத்திய காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சகல கட்சிகளும் தேசிய அரசியலில் பங்களிப்பினை வழங்கக்கூடிய புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களை பெற்றுக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கடந்த முறை தேர்தலில் 22ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு இம்முறை 12ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விடுதலைப்புலிகள் குறித்த பிரதேசங்களில் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தார்கள் என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்ளமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக