செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற 180 பிரதிநிதிகளின் பெயர்கள் வர்த்தமானியில்..

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற 180 பிரதிநிதிகளின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முடிவுகள் வெளியாகியுள்ள 20 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 117 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 46 பேரும் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 12 பேரும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தொகுதிகளுக்கான மறுவாக்கு பதிவு எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தப்பட்டு, கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் கட்சிகள் பெற்றுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் குறித்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக