திங்கள், 12 ஏப்ரல், 2010

தாய்லாந்தில் துப்பாக்கி சூடுகள் நடத்தியும் போராட்டத்தை தொடரும் தக்சின் ஆதரவாளர்கள்!

தாய்லாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள அரசாங்கமான பிரதமர் அபிசித் அவருடைய ஆட்சியில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் தாய்லாந்தில் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டும் என்றுகூறி தக்சின் சினவத் அவர்களின் ஆதரவாளர்கள் கடந்த ஒருமாத காலமாக நடத்தி வந்த அமைதிப் போராட்டம் நேற்று 11-10-2010 வன்முறை போராட்டமாக மாற்றம் பெற்றது. இப்போராட்டத்தில் நேற்றைய தினம் ரச்சடாம்நீன் கல்சான் பகுதியில் தக்சின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தக்சின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் தாய்லாந்து இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனை அடுத்து தாய்லாந்தில் தற்போது அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 13, 14, 15ம் திகதிகளில் தாய்லாந்தில் கொண்டாடப்பட உள்ள சொங்ரான் நிகழ்வினை குறிப்பிட்ட சில இடங்களில் தவிர்க்குமாறு தாய்லாந்து அரசாங்கத்தினர் அறிவித்துள்ளனர். அத்தோடு தாய்லாந்திற்கு வந்திருக்கும் சுற்றுப்பயணிகளையும் பாதுகாப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று தக்சின் ஆதரவாளர்கள் நேற்றையதினம் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிர்இழந்த தக்சின் ஆதரவாளர்களின் பூத உடலை தாய்லாந்து பெங்கொக் சுற்றுப்புற பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆதரவாளர்கள் முகாம் அமைத்துள்ள பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிரடி நிருபர் தக்சின் ஆதரவாளர் ஒருவருடன் இப்போராட்டம் பற்றி வினவியபோது தாங்கள் தங்களுடைய உரிமைக்காக போராடுவதாகவும் தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் தாய்லாந்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் கூறினார். இதற்காக தாங்கள் தங்களுடைய உயிர்களை இழந்தாலும் இறுதிமூச்சு உள்ளவரை இலக்கை அடையாமல் இப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர் கூறினார் இதுபற்றி பொதுமகன் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இவர்கள் இவ்வாறான போராட்டத்தை நடத்துவதன் மூலம் தாய்லாந்து இராணுவ ஆட்சிமுறை உண்டாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கூறினார். தேங்க்ஸ்... ATHIRADY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக