திங்கள், 12 ஏப்ரல், 2010

இடம்பெயர் முகாம்களிலிருந்து 27ஆயிரம்பேர் உறவினரின் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்..

வன்னி இடைதங்கல் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்தவர்களில் 1லட்சம் பேர் வரையானவர்கள் இன்னும் நிவாரண கிராமங்களிலேயே உள்ளனர் இவர்களில் 27ஆயிரம் வரையானவர்கள் அடிக்கடி உறவினர் வீடுகளுக்கு சென்று வருவதாக படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். அத்தோடு எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு இவ்வாறு அனுமதி பெற்று வெளியே சென்று தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து அவ்வாறு வெளியேறி வருபவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது முகாம்களில் கூடாரங்களில் தொடர்ந்தும் இருக்க முடியாத வெம்மை காரணமாகவே அடிக்கடி இவ்வாறு சென்று வருவதாக குறிப்பிடுகிறார்கள். உறவினர் வீடுகளிலும் மிகநீண்டநாட்கள் தங்க முடியாததன் காரணமாக மீண்டும் குறிப்பிட்ட நாட்களின் பின்னர் முகாம்களுக்கு திரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முகாம்களிலிருந்து விருப்பத்தின் பெயரில் நிரந்தரமாக வெளியேறிச் சென்றவர்களில் கணிசமானவர்கள் தொடர்ந்தும் உறவினர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருப்பதாக அறியக் கிடைக்கிறது. இதேவேளை தேர்தலின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக தமக்கு அரசதரப்பினர் மற்றும் படையினர் தெரிவித்திருப்பதால் மீண்டும் தாம் முகாம்களுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இடைதங்கள் முகாம்களில் தங்கியிருப்போர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக