வியாழன், 22 ஏப்ரல், 2010

ஜனநாயக தேசிய முன்னணி ஆளும் கட்சியில் இணையும் சாத்தியம்..!

மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணையும் சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் போட்டியிட்டு தோல்விகண்ட நிலையில் தேசியப் பட்டியலில் மனோகணேசனுக்கு இடம்வழங்காமை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல்நிலையே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது. கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியுடன் மனோகணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்துகொண்டது. ஜனாதிபதித் தேர்தலில்பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு முன்னணி ஆதரவளித்தது. பின்னர் சரத்பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி அமைத்து ஜே.வி.பி ஆதரவளித்தபோதிலும் மனோகணேசன் ஐ.தே.முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்டார். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவார் எனக்கருதப்பட்ட மனோ கனேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதர்கு தீர்மானித்திருந்தார்.கொழும்பில் இலகுவாக வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருந்தும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட அவர் எடுத்தமுடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கன்டி மாவட்டத்தில் இதுவரை தமிழ் பிரதிநிதியொருவர் இல்லாத சூழ்நிலையிலேயே தாம் கலமிறங்கியுள்ளதாக மனோகணேசன் அச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக