வியாழன், 15 ஏப்ரல், 2010

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் சிவாஜிலிங்கம் முறைப்பாடு.. ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டம்!

இந்தியாவிலிருந்து தான் நாடு கடத்தப்பட்டமை குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முறைப்பாடு செய்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது தெரிந்ததே. சென்னை விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குள் பிரவேசிக்க சிவாஜிலிங்கம் முயற்சித்ததாகவும் அதற்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் அனுமதி மறுத்து நாடு கடத்தியதும் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்ததும் தெரிந்ததே. இது குறித்து இன்றுகாலை இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தில் தமது கண்டனத்தை முறைப்பாடாகச் செய்துள்ளதுடன் இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தப் போவதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக