ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் குழு விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பங்களாதேஷ் இராணுவ பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ளது இந்த செய்தியினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது பங்களாதேஷின் இராணுவ குழுவுக்கு மேஜர் ஜெனரல் எம்.டி.எதீசன் தலைமை தாங்கியுள்ளார். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வு புனர்நிர்மாண மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆத்துடன் அவர்கள் கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினருடன் விஷேட கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக