சனி, 10 ஏப்ரல், 2010

எதையும்! எப்படியும்! எப்போதும்! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

இலங்கை, ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் அநேக எதிர்பார்ப்புகளின் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை கிடைத்த முடிவுகளின்படி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (நாபா அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தோல்வியடைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்திகளின் பின்னனியைக் கொண்டு நாம் பலவற்றைப் பலவாறாக புரிந்து கொள்ள முடியும். இம்முடிவுகள் இத்தேர்தலில் பங்கு பற்றி தோல்வி தழுவிக் கொண்ட அனைத்துத் தரப்பினர்க்கும் முக்கியமான செய்திகளை அளித்துள்ளன. ஈழத்தில் இன்று தமிழ்மக்களின் மனோநிலை எவ்வாறாக உள்ளது ? இத்தேர்தலில் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற முடியாதது உண்மையாகவே ஒரு தோல்வியா?கால்நூற்றாண்டுக்கு மேலாக ஒரு போர்க்கலாச்சாரத்தில் பார்வையாளர்களாக்கப்பட்டு எதுவித ஜனநாயக உரிமைகளும் அற்று வாழப்ப்பழ்கிக் கொண்ட ஒரு சமுதாயமாகத்தான் இன்றைய ஈழத்துத் தமிழர்களின் சமுதாயம் காணப்படுகிறது.“ எங்கட் பொடியள் " பெற்றுத்தரப்போகும் விடுதலைக்காய் தமது ஜனநாயக உரிமைகளை அடகுவைத்துக் காத்திருந்தவர்கள் தாம் அவர்கள்.ஈழத்துத் தமிழ்மக்கள் வடகிழக்கில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுடன் கெளரவமாக வாழ்த்தேவையான கோரிக்கைகளின் அடிப்படையில் கூட ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கத் திரணியற்ற, தைரியமற்ற கட்சிகள் தான் இன்று அவர்களைப் பிரதிநிதிப்படுத்துகின்றன.ஈழத்தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற உரிமையை ஈழத்தில் துப்பாக்கிக் முனையிலும், புலம்பெயர் நாடுகளில் சுயநலவாதிகளின் துணையுடனும், அண்டைநாடான இந்தியாவில் பணத்தால் சோரம் போகக்கூடிய ஆரசியல்வாதிகள் எனத் தமை அடையாளம் காட்டிக் கொள்ளும் சில தனிநபர்களினாலும் பெற்றுக்கொண்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் காட்டிய பாதை இன்று படுகுழியில் முடிவடைந்துள்ளது.தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் யார் தப்பினார்கள் அன்றி யார் இறந்தார்கள்? என்பது ஒருபுறமிருக்கட்டும். அது இன்றைய நிலையில் தேவையற்ற ஆராய்ச்சியும் கூட.உக்கிரமான போர் எமது மண்ணில் நிகழ்ந்து இன்னும் ஒரு ஆண்டு கூட பூர்த்தியாகவில்லை. அந்தப் போர் என்னும் நிகழ்வினால் எழுந்த புழுதி இன்னும் படியவில்லை. அந்தப் புழுதியினூடாக தெரியும் எதிர்காலம் மக்களுக்கு கலங்களாகவே தெரியும்.இது ஒரு சுதந்திரமான தேர்தல் ஜனநாயகத்தின் வழியில் உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்னும் கோஷத்துடன் மக்களிடம் இந்தத் தேர்தல் கையளிக்கப்பட்டது ஆனால் வாக்களித்த விகிதத்தினரின் முடிவு மீண்டும் தமிழ்க் கூட்டமைப்பினர், ஆளும் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என பழைய குருடியிடம் கதவைத் திறக்கும் படி கேட்கும் வகையில் அமைந்துள்ளது.இது ஏன் நிகழ்ந்தது ?அடக்குமுறையை உடைத்தெறிய புறப்பட்ட இயக்கங்களின் அடக்குமுறையினுள் அடங்கிப் போயிருந்த ஈழத் தமிழர் , அந்த டக்குமுறையின் உச்சகட்டமாக புலிகளின் ஏகோபித்த அடக்குமுறையினுள் வீழ்ந்தனர். உண்மையான மக்களின் விடுதலை என்பதன் வரைவிலக்கணம் புரியாத மந்தைக்கூட்டமென புலம்பெயர் தமிழர் பலர் புலிகளின் பெயரில் தமது செல்வாக்கைக் பெருக்கிக் கொண்டனர்.உண்மையான மக்களின் நலன் யாருடைய கவனத்திலும் எடுபடாது போனது. அபோதுதான் அரசியல் சாணக்கியத்தில் ஊறிபபோயிருந்த மகிந்த சகோதரர்கள் தகுந்த நேரத்தை நோக்கிக் காத்திருந்தார்கள்,புலிகளின் அடவடித்தனத்தின் உச்சகட்டத்திற்குட்படுத்தப்பட்ட ஈழத் தமிழ்ச் சமுதாயம் தொடர் போர்ச்சுழல்களினால் எழுந்த மனச்சோர்வு கொண்ட ஈழத்தமிழ் மக்கள் பயங்கரவாதம் பற்றிச் சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கடும்போக்கு.. இவைகள் அனைத்தும் தமக்குச் சாதகமாகப் பொருந்தி வந்த வேளையிலே தமது பலத்தையும் , சர்வதேச அரசியல் நிலைமையையும் முற்றாகப் பிழையாகப் புரிந்து கொண்டிருந்த புலிகளின் மீது பொருதினார்கள் தமது போரை. ஈழத்தமிழ் மக்களின் 25 வருட கால தியாகங்கள் அனைத்தும் புலிகளின் கண்மூடித்தனமான போக்கினால் சின்னாபின்னமானது.புலிகளின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் வரும் கடுஞ்சொற்களல்ல இவை. இனிவரும் காலத்தில் இன்றைய தோல்விகளை வெற்றியை நோக்கிய படிகளாக மாற்றவேண்டுமானல் இவைகள் நிச்சயமாக அலசப்படவேண்டியது அவசியமாகிறது.இந்தச் சூழலிலே தான் ஈழத் தமிழ்மக்கள் தம்மை புலிகளின் அடக்குமுறையிலிருந்து மீட்டு விட்டோம் என்று கோஷமிட்ட மகிந்தாவின் புதிய சிந்தனையின் கீழமைந்த தேர்தலைச் சந்தித்தார்கள்.புலிகளின் பாதை பிழையானது என்று தெரிந்திருந்தும் தமது சுயலாபங்களுக்காக வாய்மூடு மெளனித்திருந்த பலரும் இந்தப் புதிதாகப் புலர்ந்த ஜனநாயகப் பொழுதுடன் தம்மை இணைத்துக் கொள்ளப் புதுவேகத்துடன் தேர்தல் களத்தினில் குதித்தார்கள்.இங்கேதான் மிகவும் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விகள் எழுகின்றன.புலிகள் பிழையாக நடக்கிறார்கள் என்று தெரிந்தும் வாய்மூடி இருந்தவர்கள் மத்தியில் புலிகளுக்கும், அரசாங்கத்திர்கும் மாறி,மாறி வேண்டுகோள்களும் கடிதங்களும் வரைந்த திரு. ஆனந்தசங்கரி அவர்களின் தீரத்தை கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு.பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்து அரசியல் பாதைக்குத் திரும்பி வந்து விடு என்று அறிவுறுத்தலுடன் கூடிய கடிதத்தை ஆனந்தசங்கரி வரைந்திருந்தார் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனந்தசங்கரி அவர்களின் நோக்கம் தூய்மையானதா? இல்லையெனில் பூடகமாகப் பிரபாகரன் அவர்களின் யுத்த மோகத்தை வெளிக்காட்ட வர் எடுத்த ஒரு நடவடிக்கையா? என்பது போல பலர் விமர்ச்சித்திருந்ததை அறிவேன். எது, எப்படியாயினும் தனது மெளனத்தைக் கலைத்து அவர் விடுத்த அறைகூவல் "தம்பியை"ச் சிந்திக்க வைத்திருக்க மாட்டாதா?அதுமட்டுமின்றி சித்தார்த்தன், சிறீதரன், டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர்கள் பிரபாகரனின் இயக்கத்தின் அழிவிற்குப் பின்னால் முளைத்தவர்கள் அல்ல. அவர்களும் கூடப் பலவிதமான அறிக்கைகளை பல் சமயங்களில் புலிகள் பலமாக இருந்த போதும் விட்டு வந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை.ஆனால் தமிழர் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மட்டும் தமது இருப்புக்காக புலிகள் செல்லும் பாதை பிழை என்று தெரிந்திருந்தும் அவர்களின் ஊதுகுழல்களாஅக தமது சொந்த நலன் கருதி செயற்பட்டார்கள். புலிகளின் அடக்குமுறைகளின் வலுக்கட்டாயாமாக தமிழ்க்கூடமைப்பினரை ஆதரிக்கப் பழகிக் கொண்ட அரசியல் பொம்மைகளாஅன ஈழத்தமிழ் மக்கள், குறிப்பாக வடபுலத்தினர் இன்னும் அந்த மாயையிலிருந்து விடுபடவில்லை.ஈழத் தமிழ் மக்களின் முன்னே இருந்த முடிவுகள் மூன்று வகைகளாகப் பிரிகின்றனதனித்தமிழீழம் என்னும் கோரிக்கையை அழுந்திப்பிடித்துக் கொள்வதுஆளும் கட்சியை ஆத்ரிப்பதின் மூலம் இப்போது மூச்சு விடுவதற்குக் கிடைத்த அவகாசத்தை இன்னும் கொஞ்சம் நீடித்துக் கொள்வதுமுற்றுமுழுதாக மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்கும் மார்ரு இயக்கங்களை ஆதரிப்பது.இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் எடுத்த முடிவு இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.அடக்குமுறையை உடைத்தேன் என்று கூறும் மகிந்தாவை ஆதரித்து அவர் கொடுத்த அவக்குறுதிகள் ஏதாவது நிரைவேறுகிறதா ? என்று பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம்புலிகள் மறைந்தாலும் அவர்கள் மீது நாம் கொண்டிருந்த விசுவாசம் மறையவில்லை என்று உணர்த்த தமிழ் கூட்டமைப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வாக்களித்தமைஇதிலே தமிழ்க் கூட்டமைப்பினரைப் புறக்கணித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைத் தெரிவு செய்யுங்கள் என்று புலம்பெயர் புலிவிசுவாசிகள் மிகப் பரவலாகப் பிரச்சாரம் செய்தார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் அவர்களின் கனவிற்கு இவர்கள் துணை போவார்கள் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம் என்று எண்ண வேண்டியுள்ளது.சரி இதுதான் இன்றைய நிலை.ஏதோ புலிகளின் விசுவாசத்தை நிலைநிருத்த வேண்டும் என தமிழ் மக்களும் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், எப்போதும் நாம் முன்னனியில் என அரசாளும் மகிந்தாவின் கூட்டணியினரும் பாராளுமன்றக் கதிரைகளை இந்தத் தேர்தலில் பிடித்துக் கொண்டுள்ளார்கள்.சரி ஜனநாயகத்திற்காக, மக்களின் முன்னேற்றத்துக்காகப் போராடுகிறோம் என்று தேர்தலில் சூளுரைத்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி நாபா அணி இனி என்ன செய்ய வேண்டும் ?இனித்தான் அவர்கள் தமது புனிதமான கொள்கைகளை முன்னைவிட கூடுதலாகக் கடைப்பிடிக்க வேண்டும். மக்களின் விடுதலை என்பது எந்த மக்களுக்காக வேண்டப்படுகிறதோ அவர்களே அதைப்புரிந்து கொள்லாத நிலையில் இந்தத் தோல்விகளைக் கண்டு துவண்டு போய்விடக்கூடாது.உணமையான கொள்கைகளையும் , மக்களின் சேவையையும் உளச்சுத்தியுடனும் , முழுமுனைப்புடனும் செய்வது ஒன்றே தூய்மையான கொள்கைகளை மக்களுக்கு விளக்கவல்லவை.எமது மக்களின் அமைதியான வாழ்வும், எமது கலாச்சார அடையாளங்களின் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை.பாரளுமன்றப் பதவிகளை தமது வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது. பாராளுமன்றக் கதிரைகளின் இருப்பவர்கள் உளச்சுத்தியோடு தமது மக்களுக்கு சேவை செய்யாது நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கனவிலிருக்கும் புலம்பெயர் எஜமானர்களுக்கு பணிபுரியும் வரை இவ்வுலகத்தில் ஆனந்தசங்கரிகளும், சித்தார்த்தர்களும், சிறீதரன்களும் அவசியம்.எதையும், எப்படியும், எப்போதும் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஆயுதமுனையில் சிகாலம் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் உண்மையான் கொள்கைகளின் முன்னால் நிகழ முடியாது-ஊர்க்குருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக