
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் இயங்கியபோது, வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு நிதி உதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப்பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டதாகவும் அத்தொலைக்காட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக