புதன், 24 மார்ச், 2010
பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கும் தொகையானது வேகம் கொண்டதாக அமையவேண்டும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்..!
அரசியல் ரீதியாக நாம் எந்த தவறும்விட்டதில்லை இனிமேலும் விடப்போவதில்லை என தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் நடைபெறபோகும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கும் தொகையானது வேகம் கொண்டதாக அமையவேண்டும் என கூறியுள்ளார். வவுனியா சின்னப்புதுக்குளத்தில் நேற்று ஞாயிறு இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தல் முதன்மை வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில்- தமிழ்மக்கள் இந்த தேர்தலில் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் அதுவும் தமிழ் கட்சிக்கே வாக்களியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். தமது அமைப்பினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட சேவைகளை விளக்கினார் நாங்கள் தமிழ்தேசியம் மீது பற்றுக்கொண்டவர்கள் அது அழிந்துவிடக்கூடாது என்பதில் இறுக்கமாகவே உள்ளோம். 1990ம் ஆண்டு வவுனியா பிரதேசம் சுடுகாடுபோல் காட்சியளித்தபோது அதனை மீண்டும் வழமைக்கு கொண்டுவர நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலருக்கு தெரியும். பல தோழர்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. வன்னிப்பிரதேசம் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் நாம் என்றுமே கவனமாகவே இருந்தோம். அரசியல்தீர்வு உள்ளிட பல விடயங்கள் பாராளுமன்றத்தில் பேசப்படவேண்டியுள்ளது. எனவேதான் தகுதியானவர்களும் இறுக்கமானவர்களும் சபைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்பி வேட்பாளர் வி பாலச்சந்திரன், வேட்பாளர் பவான் சிவநேசன், வவுனியா நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ரி-லிங்கநாதன் உள்ளிட பலர் இந்த வைபவத்தில் உரையாற்றினார்கள். நகரசபை உறுப்பினர் சு குமாரசாமி இதனை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக