புதன், 24 மார்ச், 2010
இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவை போன்ற மாநிலங்களின் அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வே சரியானது – ரிபிசியில் ஆனந்தசங்கரி
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவை போன்ற மாநிலங்களின் அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வே சரியானதுகாக அமையும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும் யாழ் மாவட்டத்தின் அக்கட்சியின் தலைமை வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி ரிபிசியில ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியில் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தான் இலங்கையில் உள்ள அணைத்த மததலைவர்களுடனும் அமைச்சர்கள் பல பாரளுமன்ற உறுப்பினர்கள் பல சமூக அமைப்புகள் முக்கிய இராஜதந்திரிகள் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருஜெயசூரியா ஆகியோருடனும் இது தொடர்பாக உரையாடிய போது சாதகமான பதிலை கிடைத்தாகவும் தெரிவித்தார் சமஸ்டி என்ற சொற்பதம் இலங்கையில் உள்ள சிங்கள மக்களை பொறுத்தமட்டில் ஓரு வேண்டாத சொற்பதமாக உள்ளது அதைபற்றி பேசி நேரத்தை விரயம் செய்யாமால் மூவின சமூக ஏற்ற கொண்டு சமமாக வாழ்க் கூடியவகையில் இந்தியாவில் உள்ள மாநில முறையே சிறந்தது எனவும் தெரிவித்தார் தற்போது நடைபெறுகின்ற தேர்தல் சர்வதிகாரத்தை நோக்கி செல்வதாக தெரிவித்தார் அதனுடைய தாக்கமே இந்தளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் ஒன்றுமே இல்லாமால் இருந்த பலர் தேர்தல் அறிவிக்கபட்டபின் செல்வந்தாரக ஆகியுள்ளமையும் தமிழ் மக்கள் ஒரு பெறும் சதிவலைக்குள் சிக்கியுள்ளதை காண கூடியதாக உள்ளது எனவும் குறிப்பிட்டார் புலிகளுக்கு எதிராக தான் செயற்படவில்லை எனவும் புலிகளை சரியான வழியில் கொண்டு செல்லுவதற்காக தான் பல ஆலோசனைகளை வழங்கியதாகவும் ஆனால் அவை அணைத்தையும் புலிகளால் நிராகரிக்கபட்டதாகவும் கூறிய தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அன்று புலிகளால் தனது ஆலோசனைகளை ஏற்று கொண்டிருந்தால் இன்று புலிகள் அழிக்கபட்டிருக்கமாட்டார்கள் அத்தோடு புலிதலைவர் காப்பாற்பட்டிருப்பார் பெரும் தொகையான எமது மக்கள் பாதுகாக்கபட்டிருப்பார்கள எனவும் தெரிவித்தார் அதேநரத்தில் யுத்ததின் போது எமது மக்கள் கொள்ளபட்டமைக்கும் புலிகளின் தலைவர் உட்பட புலிகள் அழிக்கபட்டமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு எனவும் தெரிவித்தார் ஏன்னில் புலிகள் செய்த அத்தனை நடவடிக்கைகளை சரியென ஏற்று கொண்டதோடு அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டமால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பட்டதன் காரணமே புலிகளின் அழிவிற்க்கு காரணம் எனவும் தெரிவித்தார் தான் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது வன்னி மக்கள் கையேந்தி கந்தல் உடைகளுடன் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அதனை தான் பார்த்து வேதனையடைவதாகவும் குறிப்பிட்டார் அந்த மக்கள் கடந்த காலங்களில் வாழ்ந்த வாழ்க்கை தான் நேரடியாக பார்த்ததோடு அந்த மக்களோடு வாழ்ந்தவன் என்ற ரீதயில் அந்த மக்கள் கையேந்தி வாழ்வதையிட்ட கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார் அண்மையில் ஜனாதிபதி சிங்கப்பூர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்து கருத்து குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்த அவர் எமது மக்கள் உணவுக்காக அல்லது கட்டிடங்களுக்காக போரடவில்லை என தெரிவித்த அவர் அரசியல் உரிமைகளுக்காகவே போரடியதாகவும் தெரிவித்தார் சிலர் வெளிநாடுகளில் இருந்து இங்கு விஜயம் செய்து ஒரு சில முகாம்களை பார்த்துவிட்டு அரசை பாரட்டி ஊடங்களுக்கு கருத்துகளை வெளியிட்டு இங்கு உள்ள மக்களை வேதனை அடையவைத்தாகவும் குறிப்பிட்டார் 800 அகதி வாழும் மக்களுக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளதை எடுத்த விளக்கிய தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ ஆனந்தசங்கரி இது போன்று பல குறைபாடுகள் அகதி முகாம்களில் உள்ளதை புலம் பெயர்ந்த பிரதநிதிகள் என்று கூறி கொண்டு இங்கு விஜயம் செய்பவர்கள் கண்டும் கானமால் அரசுக்கு புகழாரம் சூட்டுவதிலே நேரத்தை செலவிட்டார்கள் எனவும் எனவே இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நடவடிக்கையை தவிர்த்து கொண்டு மக்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்தார் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி இளைஞர் ஒருவர் கூறிய கருத்தினையும் மிகவும் கவலையுடன் பகிர்ந்து கொண்டார் யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்த போது எங்கள் நிலங்களை வீடுகளையும் கொடுத்தோம் எங்கள் தோட்டங்களிலும் வயல்களிலும் விளைந்த பயிர்களை கொடுத்தோம் அத்தோடு தேவையான அத்தனை உதவிகளையும் செய்தோம் ஆனால் நாங்கள வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு அகதிகளாக எங்கள் அவயங்களை இழந்து வந்தபோது இருபதனாயிரம் வாடகையும் இரண்டு லட்சம் ரூபாய் முற்பணமாக கேட்பதாகவும் அந்த இளைஞன் குறிப்பிட்டபோது தான் வெட்கம் அடைந்தாக குறிப்பிட்டார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக