புதன், 10 மார்ச், 2010
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் விஷேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் -தேர்தல் ஆணையாளர்..!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் விஷேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக சகல வேட்பாளர்களும் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக அடையாள அட்டை இன்றி வாக்குச் சாவடிகளுக்கோ அல்லது வாக்கு எண்ணும் நிலையங்களுக்கோ அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக