புதன், 24 மார்ச், 2010
ஜனாதிபதி தேர்தல் நிலவரம் மாறியிருந்தால் எனது சரித்திரம் ஆறடி அறைக்குள் புதைக்கப்பட்டிருக்கும் -ஜனாதிபதி தெரிவிப்பு..!!
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் ஆறடி அறைக்குள் அடைக்கப்பட்டோ அல்லது ஆறடி குழிக்குள் புதைக்கப்பட்டோ எனது சரித்திரம் முடிவடைந்திருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாகவே மாத்தளையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையி;ல் 2005ம் ஆண்டு தேர்தலில் பிளவுபட்டு சின்னாபின்னம் அடைந்திருக்கும் நாட்டை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோரிக்கையுடனேயே மக்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களித்தளர். மக்களின் கோரிக்கையை நான் நிறைவேற்றினேன் கொழும்புக்கு மட்டுமே மட்டுப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை நாட்டின் பிறபகுதிகளுக்கும் குறிப்பாக கிராமப்புறங்களுக்கும் விஸ்தரித்தேன் வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் நமது நாடும் முக்கிய இடத்தை பெறக்கூடிய காலம் மிக அருகிலேயே உள்ளது நமது சுற்றுலாதுறை வெகுவாக வளர்ச்சியடையும் என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக