வியாழன், 18 மார்ச், 2010

வாக்குகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன்: ஜனாதிபதி..!

நாட்டை ஒருங்கிணைத்த போது ஏற்பட்ட சவால்களை வெற்றி கொண்டதை போன்று நாட்டை அபிவிருத்தி செய்யும் போது ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது அரசாங்கம் நாட்டையோ அல்லது இனத்தையோ காட்டிக்கொடுக்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெஹிவளையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களிடையே பேசும்போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது,
கடந்தகால அரசாங்கங்கள் கைவிட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் எடுத்தது தேர்தலை பற்றிய நோக்கத்தில் அல்ல. நாட்டின் அபிவிருத்தியை வாக்குகளுக்காக காட்டிக் கொடுக்க தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
நாம் இந்த நாட்டின் அனைத்து இனங்களுக்கும் கெளரவம் வழங்குகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் இனங்களு க்கிடையிலான இணைப்பை சக்தி மிக்கதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண் டோம். எனது ஒன்று விட்ட சகோதரனின் மகள் ஒரு யாழ்ப்பாண தமிழ் இளை ஞரையே திருமணம் செய்துள்ளார். அதேபோல் எனது ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் ஒரு முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துள்ளார்.
கிராமத்திலும் நகரத்திலும் பாதைகளுக்கு கொங்கிஅட் போட நாம் நடவடிக்கை எடுத்தோம். நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கை களை நாம் மஹிந்த சிந்தனை மூலம் செய்துள்ளோம். இதற்காக பாரிய மின் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். நுரைச்சோலை, மேல் கொத்மலை ஆகிய பாரிய மின் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்தோம். இந்த நாட்டின் அபிவிருத்தி எனக்கு வாக்குகளை விட பெறுமதியானது.
இந்த நாட்டின் கடல் வளத்தை பயன் படுத்துவதன் மூலம் கடல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் திட்டமிட்டுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம், கிழக்கில் ஒலுவில் துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், இதுபோல் ஐந்து துறைமுகங் களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தி ருக்கிறோம். அது மட்டுமன்றி இந்த நாட்டில் மேம்பாலங்களை அமைத்தோம். தெஹி வளை, நுகேகொடை ஆகிய இடங்களில் இன்று மேம்பாலங்கள் உள்ளன. நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமானால் இவ்வாறான நிர்மாண வேலைகள் இடம்பெற வேண்டும்.
யுத்தத்தை செய்து கொண்டே நாம் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். நாம் இந்த வெற்றியை பெற்றது நாட்டையோ இனத்தையோ காட்டிக் கொடுத்து அல்ல. உங்கள் பிள் ளைகளுக்காக ஒருநாடு இருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.இந்த வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு சக்தி மிகுந்த பாராளுமன்றம் தேவை. இந்த நாட்டை பொறுப்பேற்ற போது எனக்கு கிடைத்தது சபாநாயகரைக் கூட நியமிக்கமுடியாதிருந்த பாராளுமன்றமே யாகும். எனவே சக்தி மிக்க பாராளுமன்ற த்தை கட்டியெழுப்ப நாம் ஒன்று சேர வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக