வியாழன், 11 மார்ச், 2010

ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-ரி.எம்.வி.பி..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ரி.எம்.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது. ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கட்சி அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டமூல அமுலாக்கம் மற்றும் ஒஸ்லோ பிரகடனத்தை நிராகரித்தல் ஆகியன தமது கட்சியின் பிரதான கொள்கைகளாகும் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் 13வது திருத்தச் சட்டமூல அமுலாக்கம் தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் கொள்கைப் பிரகடனம், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிகாரச் செயலாளர் நிரூபமா ராவோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக