ஜனாதிபதியின் புதல்வரும் தற்போது அரசியல்களம் குதித்துள்ளவருமான நாமல் ராஜபக்ஸ திடீர் விஜயமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் நயினாதீவு நாகவிகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடற்படையினரின் பாதுகாப்புடன் தனது தொண்டர்கள் சகிதம் அவர்கள் சென்றிருந்தனர். எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் நோக்கில் நேற்றுமாலை யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், இன்றும் அங்கேயே தங்கியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி கட்சி வெற்றிலைச் சின்னத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. இதனிடையில் தொழில்நுட்பக கல்லூரி அதிபர் என் யோகராஜனும் சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். யோகராஜனின் ஏற்பாட்டிலேயே நாமல் ராஜபக்ஸவின் யாழ் விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக