திங்கள், 8 பிப்ரவரி, 2010

மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை..!!

எதிர்வரும் காலத்தில் கடமையின் நிமித்தம் மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் ஆயுதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போது அல்லது கலகத்தின் போது மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்த வேண்டுமெனவும் இது தொடர்பாக பொலிஸாருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னைய காலத்தில் பொலிஸார் துப்பாக்கிகளுடன் மக்கள் மத்தியில் செல்லவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக