
ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரட்ன ஆயுத விலைமனுக் கோரலில் மோசடி செய்து 35கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இராணுவ ஆவணங்களை மோசடியான முறையில் பயன்படுத்தி இந்த ஊழலை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரட்ன பாங் ஓவ் அமெரிக்கா என்ற வங்கியில் 35கோடி ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஹைகோர்ப் நிறுவனத்தின் ஊடாக அவுஸ்திரேலிய ஆயுதவிநியோக நிறுவனமொன்று விலைமனுக் கோரல் சமர்ப்பிப்பதனைப் போன்று போலி ஆவணங்களை தயாரித்து தானுக்க இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளார். தனகவின் தாயாரின் வங்கிப் பெட்டகத்திலிருந்து மீட்கப்பட்ட பணம் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக