வியாழன், 18 பிப்ரவரி, 2010

புலிகளின் தொழில் அதிபர் இந்திரன்-நடிகை ரம்பா நிச்சயதார்த்தம்!

வெளிநாட்டு தொழில் அதிபரான யாழ் மானிப்பாயை சேர்ந்த இந்திரன் என்பவர் இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். கனடாவில் புலிகளின் தொழில் நிறுவனமான மஜிக்வூட் தொழில் நிறுவனத்தை நடாத்திவரும் இவர். ரம்பா என்ற இந்திய சினிமா நட்சத்திரத்தை திருமணம் செய்து கொள்கின்றார். அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரம்பாவை ஏப்பிரல் 8ம் திகதி திருப்பதியில் வைத்து இந்திரன் திருமணம் செய்து கொள்கின்றார். தமிழீழம் பெற்று தருவதாக கூறி புலம்பெயர் வாழ் தமிழர்களிடம் சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் இவ்வாறு தனிநபர் கைகளில் சிக்குண்டு, இந்திய சினிமா நட்சத்திரங்கள் போன்றவழியில் அநியாயமாக்கப்பட்டு வருகின்றது. வுன்னியில் இடம்பெற்ற கோர யுத்தத்தில் சிக்குண்டு மக்கள் பசியாலும், பட்டிணியாலும் வாடியபோது உதவாத இந்த பணம் இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கவும், வைரக்கல் மோதிரம் வாங்கவும் உதவியுள்ளது குறித்து புலம்பெயர் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இவ்வாறான தொழில் அதிபர்கள் போன்று பலர் புலிகளின் பணத்தில் பிரபலம் பெற்றுள்ளனர். புலிகளின் பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் விரைவில் அம்பலத்திற்கு வரும். இது தொடர்பான விசாரணைகளில் அவ் அவ் நாடுகளில் புலனாய்வுதுறையினர் ஈடுபட்டுள்ளதுடன், வருமானம் எவ்வாறு வந்தது குறித்த வருமான வரியையும் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக