
இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய அரசு சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4 பிளஸ் ரகத்தைச்சேர்ந்த ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் திருமதி கெதீகே க்ளுக்மென் கையளித்தார். கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே ஆகியோருடன் ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக