புதன், 17 பிப்ரவரி, 2010

எதிர்கட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் -அமெரிக்கா தெரிவிப்பு..!

எதிர்கட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக் காட்டியுள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக்கூடிய பின்னணியை ஏற்படுத்தல் ஜனநாயகத்தின் முக்கிய குணாதிசியங்களில் ஒன்று என அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக