வெள்ளி, 8 ஜனவரி, 2010

மட்டு மேயர் சிவகீதா ஜெனரலுக்கு ஆதரவு..!!

மட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், எனது தந்தை ராஜன் சத்தியமூர்த்தி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாம் நாட்டைவிட்டு ஓடியிருந்தோம். எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் அலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும் , புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி , இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக