வெள்ளி, 8 ஜனவரி, 2010

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை..!!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. மீராவோடை ஜும்ஆப்பள்ளி, வீதியைச் சேர்ந்த காசிம் பாவா முகம்மது ஜவ்பர் (34) என்பவரின் 15மாதக் கைக்குழந்தையே பரிதாபகரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைக்குழந்தையின் மூத்த சகோதரர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன். இவ்வருடத்திற்கான பாடசாலை கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு பாடசாலைக்குச் செல்வதற்காக கழுத்துப்பட்டி ஒன்றினை வாங்கித் தருமாறு தகப்பனிடம் கோரியிருந்தார். இவ்வேளையில், ஆத்திரம்கொண்ட தகப்பன் பாடசாலை செல்லும் தன்மகனையும், தன்மனைவியையும் தாக்கி, தன்மனைவியின் மடியிலிருந்த குறித்த கைக்குழந்தையை பறித்தெடுத்து அத்திவாரக் கல்லில் தலைகீழாக தூக்கி அடித்துகொலை செய்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக