வெள்ளி, 8 ஜனவரி, 2010

உண்ணாவிரதம் இருக்கும் மகஸின் சிறைக்கைதிகளில் 09பேரின் நிலை பாதிப்பு..!!

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளில் 9பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தேவதாசன் என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உண்ணாவிரதத்தைத் தொடரும் தமிழ்க்கைதிகள் நீதியமைச்சர் மிலிந்த மொறகொட தங்களை நேரில்வந்து சந்தித்து, தமக்கு உறுதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்; இல்லையேல் சாகும்வரையான தமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்று அரசியல்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தங்களை விடுவிக்கக்கோரி இலங்கை முழுவதிலுமுள்ள அரசியல் கைதிகள் நேற்றுப் போராட்டத்தில் குதித்துள்ளதாகத் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்றையதினம் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயலத் ஜயவர்த்தனா, மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபாகணேசன் ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் 98தமிழ் அரசியல் கைதிகளையும் சென்று சந்தித்ததுடன் அவர்களின் நிலைமையையும் கோரிக்கையையும் நீதியமைச்சரிடமும், சட்டமா அதிபரிடமும் முன்வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக