சனி, 23 ஜனவரி, 2010
வடக்கில் மக்கள் வாக்களிக்க இலவச பஸ் சேவை..!!
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இலவச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.தேர்தல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.தேர்தல் ஆணையாளர் மேலும் கூறுகையில்இ"வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியாவில் விசேட செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இடம் பெயர்ந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் சகல ஏற்பாடுகளையும் இச்செயலகம் கண்காணிக்கின்றது. தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1000 பஸ்கள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படும்" என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக