சனி, 23 ஜனவரி, 2010

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் குடிமக்கள் குரலுக்கான மேடை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை

எம் இனிய தமிழ் பேசும் மக்களே!.... இது வரை காலமும் எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் இருண்ட யுகத்திற்குள் இருந்து வந்திருக்கின்றன. ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை எண்ணி முன்நோக்கிய பாதையில் நடக்க வேண்டிய எமது மக்களாகிய நீங்கள் வெறும் அவலங்களையும் அவஸ்தைகளையும் மட்டும் சுமப்பவர்களாக இருந்து வந்திருக்கின்றீர்கள். அடைய வேண்டிய உரிமைகளுக்காக நம்பிக்கையோடு காத்திருந்த நீங்கள் அடைந்தவைகள் எல்லாம் தொடர் துயரங்கள் மட்டும்தான். தேவையான வரவேண்டிய உரிமைகளைப் பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளையும் இழந்து போனதுதான் இங்கு மிச்சமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் பலவும் மக்களாகிய உங்களை தவறான பாதையில் வழி நடத்தி சென்றிருக்கின்றன. அந்த தவறான வழி நடத்தலே எமக்குரியவற்றைப் பெறாதது மாத்திரமல்ல இருந்தவைகளையும் இழந்து நிற்பதற்கு பிரதான காரணமாக இருந்து வந்திருக்கின்றது. இனி வரும் காலங்களிலாவது நீங்கள் சரியான பாதையை நோக்கி நடக்க வேண்டும். எமது அவலங்களில் இருந்தும் அவஸ்தைகளில் இருந்தும் நாம் விடுபட வேண்டும். எமது மக்களாகிய நீங்கள் எமது தேசத்தில் சம உரிமை பெற்று சுதந்திர பிரiஐகளாக முகமுயர்த்தி வாழ வேண்டும். அதற்கான மாற்றங்களை உருவாக்கும் பாரிய வரலாற்று கடமை உங்கள் கரங்களில் மட்டுமே உண்டு. எதிர்வரும் 26 ஆம் திகதி நடக்கப்போவது இந்த நாட்டின் அடுத்த ஐனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல். இந்த தேர்தல் அரியதொரு சர்தர்ப்பமாக எம்மை தேடி வந்திருக்கின்றது. இந்த நாட்டின் ஐனாதிபதி யார் என்பதை உங்களது வலிய கரங்களால் நீங்களாகவே தீர்மானம் எழுதுவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கனிந்து வந்திருக்கின்றது. இது வரை காலமும் உங்களுக்கு உரிமை பெற்று தருவதாக கூறிக்கொண்டு உங்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கொண்டு உங்களது வாக்குகளை அபகரித்துக்கொண்டு உங்களை விட்டு ஓடிப்போனவர்கள் மறுபடியும் உங்கள் மத்தியில் வந்து நிற்கின்றார்கள். உங்களது வாக்குகளை அபகரித்தவர்கள் உங்களுக்காக எதை கொடுத்திருந்தார்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வசீகரமான வார்த்தைகளால் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்திருந்தார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாமல் உங்களிடம் இருந்து எடுத்த வாக்குகளால் பாராளுமன்ற உறுப்புரிமைகளைப் பெற்றுக்கொண்டு தங்களது பதவி நாற்காலிகளை பாதுகாத்துக்கொண்டு மக்களாகிய உங்களின் உணர்ச்சி நரம்புகளை சூடேற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்துநின்று மக்களாகிய உங்களை தமது சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக தவறான வழிமுறைக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றார்கள். உண்மையானதும் நேர்மையானதுமான கருத்துக்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். எமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறைகளுக்கான செயற்பாடுகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். மக்களை விட்டு ஓடிப்போகாமல் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் நின்று மக்களாகிய உங்களுக்காக உழைக்கும் உண்மையான அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளில் இருந்தே சரியான வழி முறைகள் பிறக்கின்றன. ஈ.பி.டி.பி யினராகிய நாம் இது வரை காலமும் மக்களாகிய உங்களை விட்டு ஓடிப்போன வரலாறு கிடையாது. தொடர்ந்தும் உங்கள் மத்தியிலேயே இருந்து வருகின்றோம். இதுவரை காலமும் நாம் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களையே ஆதரித்து நிற்கின்றோம். அதற்காக நாம் பத்து அம்சக் கோரிக்கைகளை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் சமர்ப்பித்திருக்கின்றோம். தேர்தல் காலங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தேர்தல் முடிந்த பின்னரே நிறைவேற்றப்படுவதுண்டு. அனாலும் நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பலவும் தேர்தலுக்கு முன்பாகவே ஐனாதிபதி அவர்களால் நிறைவேற்றப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதை நீங்கள் நடைமுறையில் உங்களது கண்களால் பார்த்து வருகின்றீர்கள். நாம் முன்வைத்திருக்கும் எஞ்சியுள்ள கோரிக்கைகளும் தேர்தலுக்கு பின்னர் நிறை வேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி யினராகிய நாமே ஏற்கின்றோம். வாக்களிப்பது உங்கள் பொறுப்பு!.. வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பது எங்கள் பொறுப்பு! இதில் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களின் வெற்றியில் பங்கெடுப்பதால்; ஏற்படப்போகும் சகல விடயங்களுக்கும் ஈ.பி.டி.பி யினராகிய நாமே பொறுப்பு என்பதை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் நாமே ஏற்றுக்கொள்கின்றோம.;. எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்களிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தயாராக உள்ளார்களா? என்பதை நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன். ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி, பத்திரிகை அறிக்கைகளிலும் சரி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை குறித்தும் அதற்கு நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் தீர்வு காண்பது குறித்தும் தெரியப்படுத்தி வருகின்றார். இதே வேளை எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதையும் குறிப்பிடாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன பதிலை கூற விரும்புகிறார்கள் என்பதை நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன். சரத்பொன்சேகா அவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஒன்று பட்ட ஐக்கியத்தை உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்கள். நாம் ஒன்று பட்ட ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனாலும் கடந்த காலங்களில் இதே தமிழ் தலைமைகள் மக்களாகிய உங்களிடம் ஒன்றுபட்ட ஐக்கியத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று கூறியதன் மூலம் அதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எமது மக்களாகிய உங்களுக்காக எதை சாதித்திருக்கின்றார்கள் என்பதை நான் அவர்களிடம் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன். 1977 இல் ஒன்று பட்ட ஐக்கியத்தை காட்டுங்கள் என்று இதே சுயலாப அரசியல் தலைமைகள் கேட்டார்கள். நீங்கள் அதை ஏற்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு (வுருடுகு) ஒன்றுபட்டு நின்று ஐக்கியத்தை வெளிப்படுத்தி இருந்தீர்கள். அதன் பின்னர் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போதும் ஒன்று பட்ட ஐக்கியத்தை காட்டுங்கள் என்று மக்களாகிய உங்களிடம் கேட்டிருந்தார்கள். அச்சுறுத்தலும் தில்லு முல்லுகளும் நிறைந்த ஒரு தேர்தலின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக TNA 22 பாராளுமன்ற உறுப்புரிமைகளை அவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அதில் அவர்கள் சாதித்தவைகள் என்ன என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன். உண்மையற்ற ஐக்கியத்திற்கான அவர்களது கோரிக்கையின் மூலம் எவைகளையும் பெறமுடியாமல் போயிருந்தாலும் அவைகளை நாம் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனாலும் சுயலாப அரசியல் தலைமைகள் மக்களாகிய உங்களை ஐக்கிப்படுமாறு கூறிவிட்டு அதனால் அழிவுகளையும் அவலங்களையும் மட்டுமே உங்களுக்காக உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். மறுபடியும் இன்று சுயலாப அரசியல் தலைமைகள் மக்களாகிய உங்களை ஐக்கியப்படுமாறு கூறுவதம் ஐக்கியத்தை உலகத்தின் கண் முன்னால் காட்டுங்கள் என்று கோருவதும் இன்னொரு பின்னடைவிற்கு உங்களை இழுத்துச்வெல்வதற்கே என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நாம் நம்புகின்றோம். நேசத்திற்குரிய எம் மக்களே!.... ஈ.பி.டி..பி யினராகிய நாமும் மக்களாகிய உங்களை ஐக்கியப்படுமாறுதான் கேட்கின்றோம். ஆனாலும் ஐக்கியம் என்பது மக்களாகிய உங்களது மீட்சிக்காகவும், அவலங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் மட்டுமேயன்றி எமது தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக அல்ல என்பதை நான் உறுதியாக உங்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிமுறைகளை ஏற்று மறுபடியும் எமது வாழ்வில் இருண்ட யுகத்தினை உருவாக்கி அவலங்களை மட்டும் சந்திக்கும் அடிமைகளாக வாழ்வதை நாங்கள் வெறுப்போம் சரியான வழி நடத்தலின் மூலம் உணவு முதற் கொண்டு உரிமைகள் வரைக்கும் பெற முடிந்த திசை வழி நோக்கி நடப்பதற்கு எமது மக்களாகிய நீங்கள் எதிர் வரும் ஐனாதிபதி தேரர்தலின் போது உங்கள் தீர்ப்பை நீங்களே சுயமாக எழுத வேண்டும் என நான் கேட்கின்றேன். முற்போக்கு ஐனநாயக சக்திகளுடன் இணைந்து எமது மக்களாகிய நீங்கள் எமது வரலாற்றை திருத்தி எழுதும் தீர்ப்புக்கு ஆதரவாக எழுச்சி கொண்டு வருவீர்களேயானால் எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்சி பெறும். தவறான சுயலாப அரசியல் தலைமைகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாமல் சுதந்திர பிரiஐகளாக நாம் அனைவரும் வாழும் காலத்தை ஒன்று பட்டு வென்றெடுப்போம் வாருங்கள் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் சார்பாக நான் உங்களிடம் கேட்கின்றேன். வெல்லப்போவது ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களே என்பது நிச்சயமாகி விட்டது அந்த வெற்றிக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலமே உறுதுணையாக அமைந்தது என்பதை நாம் எடுத்து காட்டுவோமேயானால் எமது உரிமைகளுக்காக பேரம் பேசும் சக்திகளாக நாமே உருவெடுப்போம் என்பதை அடையாளப்படுத்துவோம். எமக்கென்றொரு கனவு இருக்கின்றது. அந்த கனவே எமது கடமை! அதை நிறைவேற்ற சரியான திசை வழியில் சிந்தித்து செயற்பாடுமாறு அனைத்து மக்களையும் நான் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன். தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்! என்றும் நாம் மக்களுக்காக!! உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவிற்குக் கைகொடுப்போம் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் ! மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக