ஞாயிறு, 24 ஜனவரி, 2010
வடக்கில் தேர்தல் மோசடியில் ஈடுபடத் தயாராகும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களென புலிகளின் ஊடகங்கள் தெரிவிப்பு..!!
வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் வடபகுதியில் மோசடிகளை செய்யவென டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள் இராணுவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனரென புலிகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 23 ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பிரிகேடியர் சந்தன குணவர்தனவின் கீழுள்ள 571வது பிரிகேட் அணியிலும் சுமார் 25ஈபிடிபி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாதுகாப்பு பிரிவின் சேருவதற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் இவ்வாறு இராணுவத்தில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் இப்போது இராணுவ முகாம்களுக்குள்ளேயே பயிற்சி எடுத்து வருகின்றனர் எனவும் புலிகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை தாம் வருகின்ற 27ம் திகதி பதவியை ஏற்றதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்துப் படைப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களும் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்று பொதுவேட்பாளரான சரத்பொன்சேகா நிக்கவரட்டிய கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக