சனி, 23 ஜனவரி, 2010

தமிழரை ஒடுக்கத் தயாராகவிருந்த பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிக்கமாட்டார்கள்: அமைச்சர் டியூ குணசேகர..!!

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இரண்டரை இலட்சம் படையினரை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறிய சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என அமைச்சர் டியூ குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்காக சரத் பொன்சேகா சமர்ப் பித்த ராஜினாமா கடிதத்தை தமிழ் மக் கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் படைக்குப் புதிதாக இரண்டு இலட்சம் படையினரைச் சேர்த்து படைப் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தான் அரசிடம் கோரியதாகவும் பொன்சேகா தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் இரண்டரை இலட்சம் படையினரை அங்கு நிலைநிறுத்த வேண்டும் என்றும் முப்படையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் தனக்கு வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக