சனி, 23 ஜனவரி, 2010
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 118பேர் விடுதலை..!!
புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 118பேர் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் புலிகளுடன் நேரடியாக தொடர்புபட்டிருக்காத மற்றும் புலிகளின் செயற்பாடுகளில் பாரியளவில் பங்கேற்காத மேலும் 70பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக