சனி, 23 ஜனவரி, 2010

பாங்கோக் ஐ.டீ.சி சிறைச்சாலையில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு..!!

தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 100ற்கும் மேற்பட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகளும், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த அகதிகளும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கடந்த 18ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் 20ம் திகதியுடன் அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ய+.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வௌ;வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் 03வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாம் நாளினைப் பூர்த்தி செய்திருந்தபோது தாய்லாந்து யூ.என்.எச்.சீ.ஆரின் மீள்குடியேற்ற உயர்ஆணையாளர் இவர்களை நேரில் சென்று பார்வையிட்டு இவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளார். அத்துடன் இவர்களின் மேற்படி கோரிக்கைகளுக்கு யு.+என்.எச்.சீ.ஆர் உரிய நடவடிக்கை எடுக்குமெனவம் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்தே ஐ.டீ.சி சிறைச்சாலையில் யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக