வெள்ளி, 8 ஜனவரி, 2010

போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படலாமென ஐ.நா பிரதிநிதி தெரிவிப்பு..!!

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படலாமென ஐ.நா சபையின் மனித உரிமைகளை ஆராயும் பிரிதிநிதி பிலிப் எல்ஸ்ரன் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கெதிரான சர்ச்சைக்குரிய பிரித்தானியாவின் சனல்4 வீடியோகாட்சி தொடர்பிலான அறிக்கையை ஐ.நா சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சனல் 4 வீடியோ காட்சி வெளியானதன் பின்னர் அரசாங்கம் சில விவாதங்களை முன்வைத்த போதிலும் அவை போதுமானதாக இல்லையென்றும் குறித்த வீடியோகாட்சி உண்மையானதாக இருக்கலாமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்காட்சியை 3பேர் கொண்ட வீடியோ ஆராய்ச்சி நிபுணர்கள் ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையரசு இக்குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தாக்கல் செய்த பிலிப் எல்ஸ்ரன், இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக